Published : 25 Apr 2024 04:12 AM
Last Updated : 25 Apr 2024 04:12 AM

சித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் 30 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 30 லட்சத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்றனர். கோடையில் அனல் காற்றுடன் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்ரா பவுர்ணமி நாளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நகரை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதியில் 22 இடங்கள், ஊராட்சி பகுதிகளில் 33 இடங்கள் என மொத்தம் 55 இடங்களில் கார்கள் நிறுத்தும் வசதிகள் செய்யப்பட்டன. தற்காலிக பேருத்து மற்றும் கார் நிறுத் தங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் மின் விளக்குகள், காவல் மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

சித்ரா பவுர்ணமியையொட்டி பல்வேறு நகரங்களில் இருந்து 2,500 சிறப்பு பேருந்துகள் சுமார் 5,346 நடைகள் இயக்கப்பட்டன. மேலும், தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டு தனியார் பேருந்துகள் 20 மற்றும் 81 பள்ளி பேருந்துகள், ரயில்வே நிர்வாகம் சார்பில் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கிரிவலத்தின் போது கூட்ட நெரிசலை தவிர்ப் பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பொது மக்கள் மற்றும் பக்தர் களின் வசதிக்காக கோயில் வளாகத்துக்குள் 3 மருத்துவ குழுக்கள், 85 நிலையான மருத்துவ குழுக்கள், 20 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 15 மொபைல் அவசர வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரம் காவலர்கள், 15 தீயணைப்பு வாக னங்கள், 184 தீயணைப்பு வீரர்கள், வனப்பகுதியை கண்காணிக்க 7 இடங்களில் 50 வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோயில் வளாகத்துக்குள் 360 கண்காணிப்பு கேமராக்கள், கிரிவலப் பாதையை சுற்றி 97 கண்காணிப்பு கேமராக்கள், 24 இடங் களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் வாயிலாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நிழல் பந்தல், பூத நாராயண பெருமாள் கோயில் தொடங்கி அமைக்கப்பட்டது. மேலும், தண்ணீரால் நனைக்கப் பட்ட தேங்காய் நார்தரை விரிப்பு அமைக்கப்பட்டது.

கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக் குழந்தை வைத்தி ருப்பவர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. பக்தர்களுக்காக 60 ஆயிரம் லிட்டர் நீர்மோர், 60 ஆயிரம் கடலை உருண்டை, 80 ஆயிரம் வாழைப்பழம், ஒரு லட்சத்து 60 ஆயிரம் பிஸ்கெட், தர்ப்பூசணி பழங்கள், சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு மற்றும் இரண்டரை லட்சம் தண்ணீர் பாட்டில்கள் என நேற்று முன்தினம் மட்டும் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோயில் பிரசாதமாக வழங்கப்பட்டது. நேற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x