

கோவை: கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பிறகு, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார தொடர்புகளை அறிந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இந்தோனேஷியா சென்றடைந்தார்.
10 நாள் பயணத்தில் கம்போடியா உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களுக்கு சத்குரு செல்ல உள்ளார். அந்நாட்டின் தலைநகரான பாலியில் இந்தோனேசியாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் சாண்டியகோ யுனோ மற்றும் அவருடைய குழுவினர், பாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சஷாங் விக்ரம் ஆகியோர் சத்குருவை வரவேற்றனர்.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான வரலாற்று தொடர்புகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சருடன் சத் குரு உரையாடினார். ஆன்மீக தலங்களை சிறப்பாக பராமரித்து வருவதற்காக இந்தோனேஷியாவை பாராட்டிய சத்குரு, ‘‘இந்த ஆன்மீக அம்சங்கள் தான் இந்தோனேஷியாவுக்கு மக்களை ஈர்க்கும் காரணமாகமாற வேண்டும்’’ என கூறினார்.