

காஞ்சிபுரம்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு சார்பில் காஞ்சி சங்கர மடத்தில்குரோதி தமிழ் வருட பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று பஞ்சாங்கத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சிக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் முன்னிலை வகித்தார். பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மூத்த அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இ.பாலாஜி,மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சங்கரமடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரசாதங் களை வழங்கினார்.