ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் நேற்று பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பூமாதேவி சமேத பொன்னப்பர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் நேற்று பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பூமாதேவி சமேத பொன்னப்பர்.
Updated on
1 min read

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, கொடிமரத்தின் முன்பு உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு,கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் ஒப்பிலியப்பனுக்கு (திருவிண்ணகரப்பன்) சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

பங்குனிப் பெருவிழாவையொட்டி இன்று (மார்ச் 28) முதல் வரும் ஏப்.7-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வரும்ஏப். 4-ம் தேதி முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம், அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி, ஏப்.7-ம் தேதி உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் எஸ்.சாந்தா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in