Published : 23 Mar 2024 08:25 AM
Last Updated : 23 Mar 2024 08:25 AM

பங்குனி உத்திரத் திருவிழா: பழநி முருகன் கோயிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

பழநி முருகன் கோயில்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 6-ம் நாளான இன்றுமாலை 6 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் உலா வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வானபங்குனி உத்திரத் தேரோட்டம்நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கிரி வீதிகளில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருவிழாவையொட்டி நேற்று திரளான பக்தர்கள் தீர்த்தக் காவடி, மயில் காவடி எடுத்து மலைக் கோயிலுக்கு வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பக்தர்களின் வசதிக்காக வரும் 26-ம் தேதி வரை திருச்சி, மதுரை,தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழநிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x