Published : 20 Feb 2018 05:12 PM
Last Updated : 20 Feb 2018 05:12 PM

வார ராசிபலன் 22.02.2018 - 28.02.2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தியைத் தரும். வழக்குகளில் தொய்வு நீங்கி வேகம் எடுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். பயணங்களால் லாபம் கிடைக்கப் பெறலாம். மேலதிகாரிகளால், உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சகாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும்.

அவர்களின் ஆதரவும் கிடைக்கும். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். பழைய வாகனத்தை விற்று விட்டுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு, மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கலைத் துறையினருக்கு, வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு | எண்கள்: 5. 6, 9

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். தடைகள் நீங்கும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாது. போட்டிகள் பற்றிய கவலையின்றி தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும்.

கணவன், மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளிடம் பேசும் போது நிதானம் தேவை. உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்கள், முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்:மஞ்சள், பச்சை | எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: முருகனைத் தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். மகிழ்ச்சிக்காகச் செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் சகாயமும் கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர்ப் பயணங்கள் சாதகமாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும்.

பிள்ளைகள் மனம்மகிழும் படி நடந்து கொள்வார்கள். பெண்கள், தாராளமாகச் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காணப்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட நினைப்பவர்கள் ஆலோசித்துச் செயல்படவும். அரசியல்வாதிகள், வேலை ரீதியாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி வரலாம். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்கள், கல்வியில் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: தெற்கு, வடகிழக்கு

நிறங்கள்:மஞ்சள், ஆரஞ்சு | எண்கள்: 2, 3, 4

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் வரவைப் போலவே செலவும் இருக்கும். வெளியூர்ப்  பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர்க் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.  கூட்டுத்தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குக் கூடுதல் வேலைச் சுமை இருக்கும். மேலிடம் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான கவலைகள் நீங்கும். 

பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் நீங்கும். பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு, வழக்கத்தை விடக் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களைமெ படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: கருநீலம்,பச்சை | எண்கள்: 8, 9

பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடைமைகளைக் கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணத்தேவையைச் சரிகட்ட நண்பர்கள் உதவுவார்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பதற்குத் தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். மேலிடத்தில் கனிவான உபசரிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் அகலும்.

எந்தவொரு விஷயத்தையும் நளினமாகக் கையாண்டுச் சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே பழைய விஷயங்களைப் பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை நீடிக்கும். பெண்களுக்குப் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனக்குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு, தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும்

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, மேற்கு

நிறங்கள்:கரும்பச்சை, வெண்மை | எண்கள்: 4, 5, 8

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் நீங்கும். 

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபார விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும்.  வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையேயிருந்த இடைவெளி குறையும்.

பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாகப் பேசுவது நல்லது. பெண்கள் கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, பணிகளில் இடையூறு ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களைப் படிப்பது நல்லது.  

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: மஞ்சள், வெண்மை | எண்கள்: 4, 6, 9

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x