மாசி மகம்: பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேக பூஜை

படம்: ஆ.நல்லசிவன்
படம்: ஆ.நல்லசிவன்
Updated on
1 min read

பழநி: பழநி முருகன் கோயிலில் மாசி மகத்தையொட்டி, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மாசி மகத்தையொட்டி, பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயில் பாராவேல் மண்டபத்தில், வெள்ளி சங்கு உட்பட 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி பூஜையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, கும்ப கலசங்களில் நீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, தீபாராதனை நடைபெற்றது. உச்சிக் கால பூஜையின்போது, மூலவருக்கு 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in