விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம்: விருத்தாசலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

கடலூர்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். விருத்தாசலம் விருத்தகி ரீஸ்வரர் கோயிலில் மாசிமகத்திருவிழா பிப். 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆரா தனை நடைபெற்று, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. 6-ம் நாள் விழாவாக பிப். 20-ம் தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி தரும் ஐதீக திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் திருவிழாவாக நேற்றுபஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடை பெற்றது.

முன்னதாக, அதிகாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைய டுத்து அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர்,சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் அதிகாலை 5.45 மணியளவில் தேரோட் டம் தொடங்கியது.

தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்சி.வெ.கணேசன், நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், கும்பாபி ஷேக கமிட்டி தலைவர் அகர்சந்த், ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, கழுதூர்வெங்கடேஸ்வரா கல்விக்குழும தலைவர் வெங்கடேசன், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், கோயில் செயல் அலுவலர்மாலா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானபக்தர்கள் பக்தி முழக்கத்துடன் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.

சன்னிதி வீதி, தென் கோட்டை வீதி, மேல கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி ஆகிய 4 வீதிகள் வழியாக தேர்கள் வலம் வந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கி யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான மாசிமகத் தீர்த்தவாரி மணிமுக்தாற்றில் இன்று (பிப். 24) நடைபெறுகிறது.

ஒரு மணிநேரம் தேரோட்டம் நிறுத்தம்: தேரோட்டத்தில் முதல் தேரான விநாயகர் தேரை நிலையில் இருந்து மக்கள் வடம்பிடித்து இழுத்து வந்தபோது சாலையில் ஏறிய தேரின் ஒரு சக்கரம் திடீரென வளைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை ஈடுபட்டனர். பின்னர் சக்கரத்தின் பழுதை சரி செய்து, கிரேன் மூலம் தேரை நகர்த்தி சாலையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு பிறகு விநாயகர் தேர் ஓடத் தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in