ஓசூர் மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா - பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்

ஓசூர் மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா - பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்
Updated on
1 min read

ஓசூர்: சமத்துவபுரத்தில் உள்ள ஸ்ரீமாசாணியம்மன் கோயிலில் 7–ம் ஆண்டு மயான பூஜை குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் பால்குடம் எடுத்து நேற்று கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

இதையொட்டி, கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, தினசரி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. இதில்,நேற்று அதிகாலை கணபதி ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. இதனையடுத்து, தேர்ப்பேட்டை தெப்பகுளத்திலிருந்து அம்மனுக்குப் பால்குடம், மஞ்சள் குடம் எடுத்து பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து, மதியம் அம்மனுக்குப் பால் அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று ( 23-ம் தேதி ) பூங்கரகம் ஊர்வலம் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in