

நம் வாழ்நாளில் நடக்கும் ஆலய கும்பாபிஷேகங்கள் அனைத்தை யும் காண்பது என்பது சாத்தியம் இல்லாதது. சைவம், வைணவம் என்று வேறுபாடின்றி 90 ஆலயங்களின் கும்பாபிஷேகப் புகைப்படங்கள் http://kumbabishekam.com/ இணைய தளத்தில் உள்ளன. அத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோவில்கள் குறித்த தகவல்களும், நிறைய ஆன்மிக நிகழ்ச்சிகளின் வீடியோக்களும் இந்த இணையதளத்தில் உள்ளன. முக்கியமான கோவில்களின் தல வரலாறுகளும், கோவில்களைத் தரிசிக்கச் செல்வதற்கான பயண வரைபடமும் இத்தளத்தில் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு.