கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி விழாவில் தங்கத் தேர் உற்சவம்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில், வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்த சுவாமி.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில், வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்த சுவாமி.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று மாலை தங்கத் தேர் உற்சவம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில், கடந்த 9-ம் தேதி மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சுத்தி புண்ணியா வஜனம், ஆங்கார அர்ப்பணம், பூமி பூஜை, ருத்திகிராகன வாஸ்து ஹோமம் ஆகியவை நடந்தன.

நேற்று முன்தினம் காலை, மகா சுதர்சன ஹோமம், மகா மங்கள ஆர்த்தியும், மாலை, உற்சவ விக்ரகங்களுக்கு மகா சாந்தி அபிஷேகம் மற்றும் மகா மங்கள ஆரத்தியும் நடைபெற்றன.

நேற்று காலை சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாம சுத்தி புண்ணியா வசனம், மகா சுதர்சன மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, கும்பாராதனை, மங்கள ஆரத்தியும் நடைபெற்றன. பின்னர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்குச் சுவாமி அருள் பாலித்தார்.

இதில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. மாலை 6 மணிக்குத் தங்கத் தேர் உற்சவம் நடைபெற்றது.

இதேபோல, கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் புறநகர் அரசுப் பேருந்து பணிமனைஅருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பஞ்சமுக அலங்காரத்தில் பக்தர்களுக்குச் சுவாமி சேவை சாதித்தார்.

இதேபோல, முருகன் கோயில் மலை மீதுள்ள ஆஞ்சநேயர் கோயில், பெரிய ஏரிக்கரை சிரஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், பெத்தனப்பள்ளி பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in