

திருப்பதி: திருப்பதியில் உள்ள மஹதி அரங்கில் நேற்று 2-ம் கட்டமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 1,703 ஊழியர்களுக்கு குறைந்த விலைக்கு வீட்டு மனைப் பட்டாக்களை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி வழங்கினார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 60 தேவஸ்தான கோயில்களின் விவரத்துடன் தேவஸ்தான இணையதளம் (ttdevasthanams.ap.gov.in) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை கருணாகர் ரெட்டி இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஆர்ஜித சேவை, டிக்கெட் விவரம் என அனைத்து தகவல்களும் கிடைக்கும் என கருணாகர் ரெட்டி தெரிவித்தார்.