

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உலக நன்மைக்கான மகா ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி நடைபெற்றது.
திருக்கைலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதினம் 103-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் அருளாசியுடன் திருநெல்வேலி தெற்கு மடம் கணபதி சுப்ரமணிய சிவாச்சாரியார் முன்னிலையில் வேள்வி நடைபெற்றது. நெல்லையப்பா் கோயிலில் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள மஹா மண்டபத்தில் விநாயகா் பூஜையுடன் வேள்வி தொடங்கியது. பக்தா்கள் கோயில் பிரகாரம் முழுவதும் அமர்ந்து மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சாித்தனா்.
நிறைவாக பூா்ணாஹுதி நடைபெற்று கும்ப தீா்த்தம் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் மற்றும் வேள்வியில் வைக்கப்பட்ட கால சம்ஹார மூர்த்தி படம், ருத்ராட்சம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் மாநில செயலாளர் பா.பரமசிவம், மாநில அமைப்புச் செயலாளர் கிருஷ்ணராஜ், மாநில பொறுப்பாளர் குணத்துரை உள்ளி ட்டோர் கலந்துகொண்டனர்.