

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை, வார விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை எனத் தொடர் விடுமுறை காரண மாகத் தமிழகத்தில் உள்ள ஆன்மிகத் தலங்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், வழித் தடங்களில் உள்ள கோயிலுக்கும் சென்று வழிபடுகின்றனர்.
இதனால், உலகப் பிர சித்தி பெற்ற தலங்களில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமியைப் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இதன் எதிரொலியாக, நினைத் தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கடந்த மூன்று தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. சபரிமலை மற்றும் செவ் வாடை ( ஆதி பராசக்தி ) பக்தர்களின் வருகையும் உள்ளது. இவர்களில் ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களி லிருந்து வரும் பக்தர்களின் எண் ணிக்கையும் கணிசமாக உள்ளது.
அண்ணாமலையார் கோயில் நடை நேற்று காலை திறக்கப் பட்டதும், மூலவர் மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரம் வழியாக பொது தரிசனப் பாதையில் செல்லும் பக்தர்களும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டணத் தரிசனப் பாதையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வட மற்றும் தென் ஒத்தவாட வீதிகளில், நீண்ட வரிசையில் பக்தர்கள் திரண்டிருந்தனர். இரண்டு வழித்தடங்களில் உள்ள பாதைகளிலும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுமார் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் மார்கழி மாத பவுர்ணமி பிரதோஷத்தையொட்டி பெரிய நந்திக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பிரதோஷ நாயகரின் உற்சவம் நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமியை தரிசிக்க உள்ளூர் பக்தர்களும் திரண்டதால் பக்தர்களின் வெள் ளத்தில் அண்ணாமலையார் கோயில் காட்சி அளித்தது.
இதற்கிடையில், மலையே மகேசன் எனப் போற்றப்படும் மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணா மலையை 14 கி.மீ., தொலைவு வலம் வந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, ஓம் நமச்சிவாய என முழங்கியபடி வழிபட்டனர்.