Published : 21 Dec 2023 08:13 AM
Last Updated : 21 Dec 2023 08:13 AM
திருமலை: வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும்.
இதற்காக ஏற்கெனவே ரூ. 300 சிறப்பு தரிசனம், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் விநியோகித்து முடித்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை 22-ம் தேதி முதல் டோக்கன்கள் தீரும் வரை திருப்பதியில், விஷ்ணு நிவாசம் (ரயில் நிலையம் எதிரே), மாதவம் ( பஸ் நிலையம் எதிரே), கோவிந்தராஜ சத்திரம் (ரயில் நிலையத்தின் பின்புறம்), பூதேவி காம்ப்ளக்ஸ் (அலிபிரி கருடன் நிலை அருகே), ராமசந்திரா புஷ்கரணி (மஹதி அரங்கம் அருகே), இந்திரா மைதானம் (மார்க்கெட் அருகே), ஜீவகோனா உயர் நிலைப்பள்ளி, ராமாநாயுடு உயர்நிலைப்பள்ளி, ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி, எம்.ஆர் பல்லி ஆகிய 9 இடங்களில் 90 விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் சுமார் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT