ஆர்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் டிச.22 முதல் பிரம்மோற்சவ விழா

ஆர்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் டிச.22 முதல் பிரம்மோற்சவ விழா
Updated on
1 min read

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் பிரம்மோற்சவ விழா டிச.22-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐயப்பன் வெள்ளி ரத ஊர்வலம் 26-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை கணபதி ஹோமம், பிறகு ஐயப்பனுக்கு அபிஷேகம், உச்ச பூஜை தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்வும், அதன்பிறகு, 1008 சகஸ்ர கலச ஸ்தாபனமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 18-ம் படி பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, கலசாபிஷேகம், பூத பலி அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான ஐயப்ப சுவாமி வெள்ளி ரத ஊர்வலம் 26-ம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும். ஐயப்பன் தீர்த்தவாரி நிகழ்ச்சி 27-ம் தேதி நடைபெறும். பிரம்மோற்சவ விழாவில் தினமும் கணபதி ஹோமம், அபிஷேகம், பக்தி இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயில் பிரதான தந்திரி டி.கே.மோகன் தந்திரி குழுவினரால் பிரம்மோற்சவ பூஜைகள், படி பூஜைகள் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in