Published : 17 Jan 2018 04:12 PM
Last Updated : 17 Jan 2018 04:12 PM

வார ராசிபலன் 18/01/2018 முதல் 24/01/2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதுர்யத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.  புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலை தூக்கும். பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள்.

வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். கலைத் துறையினருக்கு, தொழில், வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: மாரியம்மனை வணங்கிவர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மன மகிழ்ச்சி கூடும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் காரியத் தடை, தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்காளியுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பெண்கள் எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டுப் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 6, 9

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள்கூடச் சுலபமாக முடியும். தொழிலில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகளைக்கூட எளிமையாகச் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். கலைத் துறையினருக்கு, விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.  அரசியல்வாதிகள் எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். சனி சஞ்சாரத்தால் காரியத் தடை, தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வட கிழக்கு

நிறங்கள்: மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: முருகனை வணங்கிவர, கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சை வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடைமைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது, கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மன வருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். பெண்களுக்கு, உங்களது பொருள்களைக் கவனமாகப் பாதுகாத்துக்கொள்வது நல்லது. கலைத் துறையினருக்கு, இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் அதிகக் கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

திசைகள்: தெற்கு, தென் கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப் பளு நீங்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்குப் புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய பொறுப்புகள் சிலருக்குக் கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற முழுமூச்சாகப் பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்;

திசைகள்: மேற்கு, தென் மேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம் | எண்கள்: 1, 3

பரிகாரம்: பெருமாளைத் தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மன வருத்தம் உண்டாகலாம். நீண்ட நாள் இழுபறியாக இருந்துவந்த பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.  பிடித்த இடத்துக்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம்.

பெண்களுக்கு, வீண் பேச்சுகளைக் குறைத்துச் செயலில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத் துறையினருக்கு, சகஜ நிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். உங்களைவிட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுக் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி;

திசைகள்: வடக்கு, வட மேற்கு, தென் மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் கஷ்டம் தீரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x