Published : 14 Dec 2017 12:16 PM
Last Updated : 14 Dec 2017 12:16 PM

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் சனிப் பெயர்ச்சிப் பொதுப்பலன்கள்

நிகழும் ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 04-ம் தேதி செவ்வாய் கிழமை (19.12.2017) பிரதமை திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், பவம் நாம கரணம், நேத்திரம், ஜீவனில்லாத அமிர்த யோகத்தில் புதன் ஹோரையில், பஞ்சபட்சியில் காலை 9.30 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறார்.

குரு வீட்டில் சனி பகவான் நுழைவதால் பாமர மக்கள் முதல் படிப்பாளி வரை ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தெளிவு பிறக்கும். கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்கள் மற்றும் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாதிப்பார்கள். சட்டப்படிப்புக்குரிய தேர்வுகள் கடுமையாக்கப்படும். அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிபதிகளின் தீர்ப்பு பலமாக இருக்கும். பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். வங்கிகளில் லாக்கர்கள் வைத்து கொள்ள கட்டுப்பாடுகள் வரும். வங்கிகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

செவ்வாயின் வீடான விருச்சிகத்தை விட்டு சனிபகவான் விலகியதால் ராணுவத் தளவாடங்களை இந்தியா அதிக உற்பத்தி செய்யும். அயல்நாட்டிலிருந்தும் அதிநவீன போர் விமானங்கள், பீரங்கிகளை அரசு வாங்கும். நம் நாட்டு எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் மற்றும் சீன பகுதிகளில் பாதுகாப்புக்கு வேலி அமைக்கப்படும். இந்தியாவின் மீது அந்நிய நாடுகள் போர் திணிக்கும். சொந்தத் தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகமாகும். வங்கித் துறை மேம்படுத்தப்படும்.

 

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

19.12.2017 முதல் 17.1.2018 வரை மூலம் 1-ல்

18.1.2018 முதல் 1.3.2018 வரை மூலம் 2-ல்

2.3.2018 முதல் 1.6.2018 வரை மூலம் 3-ல்

2.6.2018 முதல் 13.7.2018 வரை மூலம் 2-ல்

14.7.2018 முதல் 22.10.2018 வரை மூலம் 1-ல்

23.10.2018 முதல் 18.11.2018 வரை மூலம் 2-ல்

19.11.2018 முதல் 19.12.2018 வரை மூலம் 3-ல்

20.12.2018 முதல் 18.1.2019 வரை மூலம் 4-ல்

19.1.2019 முதல் 23.2.2019 வரை பூராடம் 1-ல்

24.2.2019 முதல் 22.6.2019 வரை பூராடம் 2-ல்

23.6.2019 முதல் 11.8.2019 வரை பூராடம் 1-ல்

12.8.2019 முதல் 26.9.2019 வரை மூலம் 4-ல்

27.9.2019 முதல் 19.11.2019 வரை பூராடம் 1-ல்

20.11.2019 முதல் 22.12.2019 வரை பூராடம் 2-ல்

23.12.2019 முதல் 21.1.2020 வரை பூராடம் 3-ல்

22.1.2020 முதல் 24.2.2020 வரை பூராடம் 4-ல்

25.2.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் 1-ல்

17.7.2020 முதல் 20.11.2020 வரை பூராடம் 4-ல்

21.11.2020 முதல் 26.12.2020 வரை உத்திராடம் 1-ல்

சனிபகவானின் வக்கிர காலம்

மூலத்தில் வக்கிரம்: 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை.

பூராடத்தில் வக்கிரம்: 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 வரை மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை.

உத்திராடத்தில் வக்கிரம்: 02.5.2020 முதல் 16.7.2020 வரை.

பரிகாரம்: தனுர் ராசியில் சனி வந்து அமர்வதால் நம்முடைய முன்னோர்களின் பண்பாடு, கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் பாரம்பரியச் சின்னங்களான கோவில்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்போம். நாட்டுப்பற்று, இனப்பற்றுக்குரிய கிரகமான குரு வீட்டில் தியாக கிரகமான சனி அமர்வதால் கோடிக்கணக்கானோர் ரத்தம் சிந்தி போராடி பெற்ற சுதந்திரத்தை நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்துவோம்.

அந்தந்த ராசிகளுக்கான பொதுப்பலன்களை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகளை க்ளிக் செய்யவும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x