

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார்கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் தாயார் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளானநேற்று காலை, கற்பகவிருட்சவாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் தாயார் எழுந்தருளினார். வாகன சேவையில் காளை,குதிரை, யானை போன்ற பரிவட்டங்கள் முன்னால் செல்ல, அவற்றுக்கு பின்னால் நடனக் குழுவினர் நடனமாடியபடி சென்றனர். ஜீயர் குழுவினர், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, நேற்றிரவுஅனுமன் வாகனத்தில் தாயார்காட்சியளித்தார். பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரமும், இரவு கஜ வாகன சேவையும் நடைபெறுகிறது.