Published : 10 Nov 2023 05:53 AM
Last Updated : 10 Nov 2023 05:53 AM

ஜன. 21-ல் கண்டதேவி தேர் வெள்ளோட்டம்

சிவகங்கை: தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில், சிவகங்கைசமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறும். தேர்வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் 1998-ல் தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது.

கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2012-ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி, தேரோட்டத்தை நடத்தவில்லை. இதற்கிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேர் செய்யப்பட்டது. ஆனால்,தேர் வெள்ளோட்டம் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக மகா.சிதம்பரம் என்பவர் 2019-ல்உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2020-ல் வெள்ளோட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், கரோனாவால் வெள்ளோட்டம் நடத்தப்படவில்லை.

இதையடுத்து, மகா.சிதம்பரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து நவ. 17-ம் தேதி அறிக்கைதாக்கல் செய்யயுமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், தேர் வெள்ளோட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். 2024ஜன. 21-ம் தேதி காலை 6.30 மணிமுதல் 8 மணிக்குள் தேர் வெள்ளோட்டம் நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x