

திருப்பள்ளியெழுச்சி
அருணன் இந்திரன் திசை அணுகினான்
இருள்போய் அகன்றது; உதயம் நின்
மலர்த்திரு முகத்தின் கருணையின் எழ எழ
நயனக் கடிமலர் மலர மற்று அண்ணல்
அங்கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன
இவை ஓர்! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
அருள்நிதி தர வரும் ஆனந்தமலையே!
அலைகடலே பள்ளியெழுந்தருளாயே!
அருணன் இந்திரனின் திசையை அடைந்தான் (கிழக்கில் அதிகாலையின் செந்நிறம் படர்ந்திருந்தது). அதனால் இருள் அகன்றது. உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில், கருணையின் சூரியன் எழுவதால் உதயமாகின்றது.
கண்களைப் போன்ற மணமுள்ள மலர்கள் மலர்கின்றன. மேலும் அண்ணலே! உங்கள் அழகிய கண்மணி போன்ற வண்டுகள் திரள்திரளாக ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! இதனை உணர்வீர்!
அருளாகிய செல்வத்தைத் தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே (ஒயாது வந்து கொண்டிருப்பவன்), அலைகடலே! பள்ளி எழுந்தருள்க!
மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சிப் பாடலை, பரமேஸ்வரனைத் தொழுது பாடுங்கள். பாடித் தொழுது ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா சத்விஷயங்களும் உங்களை வந்தடையும் என்பது உறுதி!