முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா தேரோட்டம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள். உள்படம் சிறப்பு அலங்காரத்தில்
முத்தாலம்மன்.
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள். உள்படம் சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன்.
Updated on
1 min read

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு முத்தாலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முத்தாலம்மன் சந்நிதியில் தொடங்கிய தேரோட்டம் நான்கு ரத வீதிகள் வழியாக நடைபெற்றது.

வத்திராயிருப்பு சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். செயல் அலுவலர் சத்ய நாராயணன், முத்தாலம்மன் பக்த சபா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் 200-க்கும் மேற்ப்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in