சமயபுரம் கோயில் உண்டியல்களில் ரூ.54 லட்சம் காணிக்கை

சமயபுரம் கோயில் உண்டியல்களில் ரூ.54 லட்சம் காணிக்கை
Updated on
1 min read

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.

இதில் ரூ.54,17,434 ரொக்கம், 1 கிலோ 406 கிராம் தங்கம், 2 கிலோ 619 கிராம் வெள்ளி, 38 அயல்நாட்டு கரன்சிகள், 209 அயல்நாட்டு நாணயங்கள் செலுத்தப்பட்டிருந்தது. மேலும், திருப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரொக்கமாக ரூ.81,530 செலுத்தப்பட்டிருந்தன.

உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, உதவி ஆணையர்கள் ஆர்.ஹரி ஹர சுப்பிரமணியம் (நகை சரிபார்ப்பு), ஆய்வாளர் நா.சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர். இதற்கு முன்பாக செப்.21-ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in