Published : 14 Dec 2017 12:13 PM
Last Updated : 14 Dec 2017 12:13 PM

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மீனம்

ங்கத்தின் தரம்கூட குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. இதுவரை ராசிக்கு 9-வது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் அறிவாற்றலையும், செயலாற்றலையும் மழுங்கடித்த சனி பகவான் 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் 10-வது வீட்டுக்குள் அமர்ந்து நற்பலன்களை தரப்போகிறார்.

ஆரோக்கியம் மேம்படும். இனி அப்பா, மகன் உறவு இனிக்கும். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசி குறை, நிறைகளை உணர்த்துவார். கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள்.

வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்றுசேர்வீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் களைகட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். ஷேர் மூலம் பணம் வரும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலர் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் செய்துகொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். அவசரத்துக்குக் கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். என்றாலும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும்.

தலைகுனிவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். எனவே கவனமாக இருங்கள். சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாய்வழியில் சொத்துப் பிரச்சினை ஏற்படும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். 19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் தெலுங்கு, இந்தி மொழி பேசுபவர்கள் உதவுவார்கள்.

25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019, 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் எந்தக் காரியமாக இருந்தாலும் நீங்களே முன்னின்று செய்வது நல்லது. 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகிச் செல்வதால் தங்க நகைகள் வாங்குவீர்கள்.

மாணவ, மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான உழைப்பும் வேண்டும். பாடங்களை அன்றே படியுங்கள். விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.

கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உங்கள் பிரச்சினைகள் பாதியாகக் குறையும். தைரியம் கூடும். கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அண்டை மாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சாதாரண மக்களின் நாடித் துடிப்பை கண்டறிந்து அதற்கேற்ப உங்களுடைய செயல்திட்டத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள்.

கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளிவரும். கிசுகிசுத் தொந்தரவுகளும், விமர்சனங்களும் அதிகமாகும். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். சந்தை ரகசியங்களைத் தெரிந்து கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் சனி 10-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் நாளுக்கு நாள் வேலைச் சுமை கூடிக் கொண்டே போகும். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இந்தச் சனி மாற்றம் தடைபட்ட வேலைகளை முடிக்க வைக்கும். அயராத உழைப்பாலும் அனுபவ அறிவாலும் வெற்றிபெறச் செய்யும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம், வண்டியூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை பவுர்ணமி அல்லது அமாவாசை திதி நாளில் வடமாலை அல்லது வெற்றிலைமாலை அணிவித்து வணங்குங்கள். வாழ்வில் சாதிப்பீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x