Published : 17 Dec 2017 01:53 PM
Last Updated : 17 Dec 2017 01:53 PM

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்- பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

பூரட்டாதி

கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய  பூரட்டாதி நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் நக்ஷத்ராதிபதி சூரியன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

+: பயணங்கள் மூலம் வெற்றி

-: உடல்நிலையில் கவனம் தேவை

பரிகாரம்: சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

 

உத்திரட்டாதி

பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் உத்திரட்டாதி நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் நக்ஷத்ரநாதன் சனி ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும்.

மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும்.

+: சொன்ன சொல்லை காப்பாற்றுவது

-: பொருட்களை கவனம் செலுத்துவது நல்லது

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

 

ரேவதி

தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் ரேவதி நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரத்தின் மூலம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். ராசிநாதன் ஆட்சியாக இருப்பதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

தொழில் ஸ்தானத்தில் யோகாதிபதி சுக்கிரன் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு  கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.

+: எந்த காரியத்திலும் திட்டமிடுதல் அவசியம்

-: குடும்பத்தில் முடிவெடுக்கும் போது கவனம் தேவை

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x