அனுமனுக்கு சந்தனக் காப்பு : சந்தான பாக்கியம் நிச்சயம்!

அனுமனுக்கு சந்தனக் காப்பு : சந்தான பாக்கியம் நிச்சயம்!
Updated on
1 min read

திருமணமாகி பல வருடங்களாகியும் கொஞ்சி விளையாட குழந்தை இல்லையே என்று ஏங்குவோர், அனுமனுக்கு சந்தனக்காப்பு செய்து வழிபடுவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. அவருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால், விரைவில் சந்தான பாக்கியம் அதாவது குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கிறார் நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.

புதிதாக வாகனம் வாங்கினால் அதை ஏதேனும் அனுமன் கோயிலில் வைத்து, சாவியை அனுமனின் திருப்பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, வாகனத்தை இயக்கினால், வாகன யோகமும் தந்து, வழித்துணைக்கும் வந்து அருள்வார் அனுமன்.

வெண்ணெய்க் காப்பு செய்து ஆஞ்சநேயரை அழகுற தரிசனம் செய்து வேண்டிக் கொண்டால், சொத்து, மனை, வீடு விஷயத்தில் உண்டான சிக்கல்கள் யாவும் தீர்ந்துவிடும். விரைவில் உங்கள் கைக்கு உங்கள் சொத்துகள் கிடைக்கப் பெறுவீர்கள் என்பது உறுதி என்கிறார் திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.

துளசி மாலை சார்த்தி, சனிக்கிழமை தோறும் வழிபட்டு வந்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டில் சுபிட்சத்துக்கு குறைவிருக்காது என்பது உறுதி என்கிறார்கள் பக்தர்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in