

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் கடந்த2006-ம் ஆண்டு முதல் ஆடி கிருத்திகையன்று, திருத்தணிகை முருகனுக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு நேற்று ஆடிக் கிருத்திகை அன்றுபட்டு வஸ்திரங்களை தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி தம்பதியினர் திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் ஸ்ரீதரன் மற்றும் நிர்வாக அதிகாரி விஜயா ஆகியோரிடம் காணிக்கையாக வழங்கினார்.
பின்னர், திருத்தணி கோயில் நிர்வாகிகள், திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி தம்பதிக்கு தரிசன ஏற்பாடுகள்செய்து, பிரசாதங்கள் அளித்து கவுரவித்தனர்.