எதிர்ப்பை அழிக்கும்... எதிரியை முடக்கும்! பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்!

எதிர்ப்பை அழிக்கும்... எதிரியை முடக்கும்! பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்!
Updated on
2 min read

வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்பு வரலாம். எவரேனும் ஏதேனும் ஒரு அல்பக் காரணத்துக்காக எதிரியாகவே நம்மை பாவிக்கலாம். தீய சக்திகளான பில்லி, சூனியம் என துஷ்ட காரியங்களில் சிலர் ஈடுபடலாம். எதுவாக இருப்பினும் வேலவன் இருக்கிறான். பயம் கொள்ளத் தேவையில்லை.

முருகப் பெருமானின் மீது மாறாத பக்தி கொண்டிருந்த பாம்பன் சுவாமிகள், இந்த எதிர்ப்புகளை எதிரிகளையும் தீய சக்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்தில், எல்லாப் பக்தர்களின் நலனுக்காகவும் குமாரஸ்தவம் எனும் பாராயணத்தை எழுதினார். மிக எளிமையானதும் மிகுந்த வலிமை மிக்கதுமான இந்தப் பாராயணத்தைத் தினமும் ஒருமுறை சொல்லி, வேலவனை வணங்கித் தொழுதால், பயமொன்றும் இல்லை. எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பதில் சந்தேகமும் இல்லை என்கிறார்கள் முருக பக்தர்கள்!

எதிர்ப்பு, எதிரி, ஏவல், பில்லி, சூனியம் ஆகியவற்றைப் போக்கும் குமாரஸ்தவம் இதோ...

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம :

2. ஓம் ஷண்மத பதயே நமோ நம :

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :

5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம :

6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம :

7. ஓம் நவநிதி பதயே நமோ நம :

8. ஓம் சுபநிதி பதயே நமோ நம :

9. ஓம் நரபதி பதயே நமோ நம :

10. ஓம் சுரபதி பதயே நமோ நம :

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம :

12. ஓம் ஷடஷர பதயே நமோ நம :

13. ஓம் கவிராஜ பதயே நமோ நம :

14. ஓம் தபராஜ பதயே நமோ நம :

15. ஓம் இகபர பதயே நமோ நம :

16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம :

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :

18. ஓம் நயநய பதயே நமோ நம :

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :

20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம :

21. ஓம் வல்லீ பதயே நமோ நம :

22. ஓம் மல்ல பதயே நமோ நம :

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :

27. ஓம் அபேத பதயே நமோ நம :

28. ஓம் சுபோத பதயே நமோ நம :

29. ஓம் வியூஹ பதயே நமோ நம :

30. ஓம் மயூர பதயே நமோ நம :

31. ஓம் பூத பதயே நமோ நம :

32. ஓம் வேத பதயே நமோ நம :

33. ஓம் புராண பதயே நமோ நம :

34. ஓம் ப்ராண பதயே நமோ நம :

35. ஓம் பக்த பதயே நமோ நம :

36. ஓம் முக்த பதயே நமோ நம :

37. ஓம் அகார பதயே நமோ நம :

38. ஓம் உகார பதயே நமோ நம :

39. ஓம் மகார பதயே நமோ நம :

40. ஓம் விகாச பதயே நமோ நம :

41. ஓம் ஆதி பதயே நமோ நம :

42. ஓம் பூதி பதயே நமோ நம :

43. ஓம் அமார பதயே நமோ நம :

44. ஓம் குமார பதயே நமோ நம :

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்.

இந்த துதி முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப்பட்டது. இது கந்தபுராணத்தின் சுருக்கம் என்கிறார்கள். மொத்தம் 44 வரிகளை உடையது இந்த குமாரஸ்தவம்.

தினமும் ஒரு முறை, ஒருமுறையேனும் பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் ஆகியவற்றை அழிக்கவல்லது இந்த பாராயணம்.

என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் உண்டு; கவலை வேண்டாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in