

ஒரு அரசர். அவரது மந்திரி, பெண் ஒருத்திக்குச் செய்த துரோகத்தால் அந்த நாட்டில் மண்மாரி பெய்யட்டும் என்று சபித்துவிடுகிறாள். நாட்டில் மழை நின்று போனது. வறட்சி வாட்டியெடுத்தது. செல்வம் அனைத்தையும் செலவழித்து நாட்டு மக்களைக் காப்பாற்றினார் மன்னர். ஒருமுறை அவர் அண்டை நாட்டுக்குப் போரிடச் சென்ற வழியில் பசிவர, வனத்திலுள்ள ஆசிரமத்துக்குச் சென்று உணவு கேட்டார். தன் ஆசிரமத்தில் காமதேனுவை வைத்திருந்த முனிவர் மன்னனுக்கும் படைவீரர்கள் அனைவருக்கும் காமதேனுவின் உதவியுடன் வயிறார உணவிட்டரர்.
காமதேனுவைப் பெறுவதற்காக முனிவருடன் போரிட்டும் அவரால் வெல்ல முடியவில்லை. இதற்குக் காரணம் முனிவர் கையில் உள்ள பிரம்மதண்டம் என்பதை அறிந்த அந்த மன்னன் தானும் முனிவராகத் தீர்மானித்தான்.
பல கடும் தவங்களை செய்த ரிஷியான அவர்தான் உலகிற்கு காயத்ரி மந்திரத்தைத் தந்த விஸ்வாமித்திரர். விஸ்வம் என்றால் உலகம்.; மித்திரன் என்றால் நண்பன் என்பதால் இது காரணப்பெயரானது என்கிறது இப்புத்தகம். இவரது வரலாறு அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளது.
புத்தகம்: ப்ரும்மரிஷி விச்வாமித்ர மஹாத்மியம் ஆசிரியர்: முனைவர் ஸு.ஸூந்தரம் விலை: ரூ.50 பதிப்பு: வாச்சா பப்ளிகேஷன் கிடைக்குமிடம்: கடை எண்.6, ஹாரிகண்ட் அபார்ட்மெண்ட், |