இல்லத்தில் நிம்மதி குடிகொள்ளும்! வாஸ்து நாள் 24ம் தேதி; வீட்டையே பூஜியுங்கள்!

இல்லத்தில் நிம்மதி குடிகொள்ளும்! 
வாஸ்து நாள் 24ம் தேதி; வீட்டையே பூஜியுங்கள்!
Updated on
1 min read

‘எது எது எங்கெங்கே இருக்கணுமோ.. .அதது அங்கங்கே இருக்கணும்’ என்று சொல்வோம். ஆனால் இந்த வாசகம் எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ... வாஸ்துவுக்கு சர்வநிச்சயமாகப் பொருந்தும்.

வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், அவருக்கு உரிய நேரத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே வாஸ்து பகவானை வழிபடுவற்கு இணையானது என்கிறார்கள். சொல்லப் போனால், வீடுதான் வாஸ்து பகவான்; வாஸ்து பகவான் தான் வீடு!

வீட்டை சுத்தமாக பெருக்கிவிட்டு, நன்றாகத் துடைத்து, முடிந்தால் எல்லா சுவாமிப் படங்களுக்கும் பூக்களைக் கொண்டு அலங்கரித்து, ஓர் அரைமணி நேரம் விளக்கேற்றி வழிபடுங்கள்.

சாம்பிராணி ஏற்றி, பீரோ துவங்கி குழந்தைகளின் புத்தக அலமாரி, பூஜையறை, சமையலறையில் உள்ள அரிசி மற்றும் தானியங்களுக்கு சாம்பிராணிப் புகையைப் பரவவிடுங்கள்.

வீட்டு வாசல் நிலைக் கதவின் மேற்பகுதியில், மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, அதற்கு ஊதுபத்தியும் சாம்பிராணியும் காட்டி வணங்குங்கள். வருகிற வெள்ளிக்கிழமை 24ம் தேதி அன்று வாஸ்து பகவானுக்கு உரிய நாள். அன்றைக்கு காலை 10.15 முதல் 11.45 மணி வரை வாஸ்து நேரம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த நாளில், வீட்டையே கோயிலாக்கி, வீட்டையே வாஸ்து பகவானாக்கி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்பு உணவை நைவேத்தியமாகப் படைத்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். ஆனந்தமாய் வாழ்வீர்கள். இல்லத்தில் எப்போதும் நிம்மதியும் சந்தோஷமும் குடிகொண்டிருக்கும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in