

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்டத்தையொட்டி நேற்று அதிகாலை 4 மணியளவில் ராமநாத சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்படிக லிங்க பூஜையும், தொடர்ந்து காலபூஜையும் நடைபெற்றன.
காலை 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினார். தேரோட்டத்தை கோயில் இணைஆணையர் மாரியப்பன் வடம்பிடித்து தொடங்கிவைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளில்வலம் வந்த தேர், பின்னர் நிலையை அடைந்தது. வரும் 23-ம்தேதி ஆடி தபசு, 24-ம் தேதி திருக்கல்யாணம், 29-ம் தேதி கெந்தனமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.