Last Updated : 27 Nov, 2017 03:35 PM

 

Published : 27 Nov 2017 03:35 PM
Last Updated : 27 Nov 2017 03:35 PM

பாவங்களைப் போக்குகிறார் பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர்!

திருநெல்வேலியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது பாளையங்கோட்டை. இங்கே அழகு கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகோமதி அம்பாள் சமேத ஸ்ரீதிரிபுராந்தீஸ்வரர்.

முனிவர் ஒருவரை அவமதித்ததால், தன் பொலிவையும் அழகையும் இழந்தார் உத்தால மன்னன். இந்த மன்னனின் சாபம் நீக்கி அருளினார் ஈசன் என்கிறது ஸ்தல வரலாறு.

கௌதம முனிவர் இங்கே கடும் தவம் இருந்ததற்காக, அவருக்கு ரிஷபாரூடராக தரிசனம் தந்து அருளினார் ஈசன்.

சிவனாரின் அருளைப் பெறவேண்டி, கௌதம முனிவர் கடும் தவம் மேற்கொண்டார். அதில் மகிழ்ந்த சிவனார், அவருக்கு ரிஷபாரூடராக, மனைவி உமையவள் சகிதம் திருக்காட்சி தந்தருளினார். என்ன வரம் வேண்டும் என்று முனிவரை சிவனார் கேட்க, இந்தத் தலத்துக்கு வருவோரின் பாவங்களையும் நோய்களையும் போக்கி அருளுங்கள். அதுவே போதும் என வேண்டினார். அதன்படியே இங்கேயே கோயில் கொண்டு, அனைவருக்கும் அருள் வழங்கி வருகிறார் ஈசன்!

சித்திரை மாதத்தில் பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடைபெறுகிறது. அதேபோல் கார்த்திகையிலும் சிவபார்வதியைத் தரிசிக்க, எண்ணற்ற பக்தர்கள் வந்து பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

சிவ பார்வதிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் முதலான நைவேத்தியங்கள் செய்து, வில்வம் மற்றும் செவ்வரளியால் அர்ச்சித்து வழிபட்டால், நம் பாவங்களையெல்லாம் போக்கி அருள்வார் சிவபெருமான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x