

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று இணை ஆணையர் மாரி முத்து தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவ லர்கள் முன்னிலை வகித்தனர். பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 ரொக்கம், தங்கம் 1,025 கிராம், வெள்ளி 13,573 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 878 கிடைத்துள்ளன.