

தேர்வில் வெற்றி பெற தெளிவுடன், குழப்பமில்லாமல், ஞாபகசக்தியுடன் இருக்கவேண்டியது ரொம்பவே முக்கியம்.
தேர்வு பயம்... யாருக்குத்தான் இல்லை?
நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாகி விடுவார்கள். இந்தப் படபடப்பும் பயமும் தேவையற்றது. பாடத்தை உருவேற்றி, மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுவதுதான் ஆகச் சிறந்த வழி!
குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம். இந்த மந்திரத்தைச் சொல்ல... குறிப்பாக மாணவர்கள் சொல்லச் சொல்ல... ஞாபக சக்தி அதிகரிக்கும். தேர்வை பயமின்றி எதிர்கொள்ளலாம். இறையருளும் துணை நிற்கும்!
அந்த ஸ்லோகம் இதுதான்...
பாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா
அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.
இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனனம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று தேர்வுத்தாளில் இறக்குவதற்கான மந்திரச் சாவி, இந்த ஸ்லோகம்! தேர்வில் வெற்றி உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.