1,041-ம் ஆண்டு சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

யானை மீது திருமுறை நூல்களை வைத்து வீதியுலா
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் திருமுறைகளை யானை மீது வைத்து வீதியுலா நடைபெற்றது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் திருமுறைகளை யானை மீது வைத்து வீதியுலா நடைபெற்றது.

Updated on: 
1 min read

தஞ்சாவூர்: மாமன்​னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழா நேற்று முன்​தினம் காலை தொடங்​கியது. இதை​யொட்டி, கிராமிய கலைஞர்​கள் பங்​கேற்ற ஊர்​வலம் மற்​றும் கருத்​தரங்​கம், கவியரங்​கம், பரதநாட்​டியம், பட்​டிமன்​றம் உள்​ளிட்ட நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

சதய விழா​வின் நிறைவு நாளான நேற்று காலை பெரிய கோயில் பணி​யாளர்​களுக்கு புத்​தாடைகள் வழங்​கப்​பட்​டன. பின்​னர், திரு​முறை நூல்​கள், அலங்​கரிக்​கப்​பட்ட யானை மீது வைத்து 100-க்​கும் அதி​க​மான ஓது​வாமூர்த்​தி​களு​டன் கோயி​லில் இருந்து புறப்​பட்டு நான்கு ராஜ வீதி​களில் வீதி​யுலா நடை​பெற்​றது.

தொடர்ந்து, தமிழக அரசு சார்​பில், கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்​சாவூர் எம்​எல்ஏ ஆர்.விஜய் சரவணன், ஆட்சி​யர் ஆர்.ரேவதி, மேயர் (பொறுப்பு) அஞ்​சுகம் பூபதி, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஏ.சுந்​தரவதனம், அரண்​மனை தேவஸ்தான அறங்​காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பர​மாச்​சா​ரிய சுவாமிகள், சதய விழா குழுத் தலை​வர் என்.எஸ்.சரவணன் உள்​ளிட்​டோர் மாலை அணி​வித்து மரியாதை செலுத்​தினர்.

அதைத்​தொடர்ந்து, அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​கள், தமிழ் அமைப்​பு​கள் உட்​பட மொத்​தம் 138 அமைப்​பு​கள் சார்​பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணி​வித்து மரியாதை செலுத்​தப்​பட்​டது. தொடர்ந்து, பெரு​வுடை​யார் மற்​றும் பெரியநாயகி அம்​மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்​றும் சுவாமி, அம்​மன் ஆகியோ​ருக்கு அலங்​காரம் செய்​யப்​பட்டு மகா தீபாராதனை ஆகியவை நடை​பெற்​றன.

<div class="paragraphs"><p>மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் திருமுறைகளை யானை மீது வைத்து வீதியுலா நடைபெற்றது.</p></div>
‘தேசவிரோத கருத்துகளை பரப்பக் கூடாது’ - டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in