

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. தற்போது கூட்டம் சாதாரண அளவில் குறைந்து காணப்படுகிறது.
நேற்று காலை நிலவரப்படி, திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் ஒரே ஒரு அறை மட்டுமே நிரம்பியது. இதனால் தர்ம தரிசனத்திற்கு வெறும் 3 மணி நேரம் மட் டுமே ஆனதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ் வாய்க்கிழமை மட்டும் 69,143 பேர் சுவாமியை தரிசனம் செய்தனர்.