

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
மலைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் படிப்பாதையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், படிப் பாதையில் சூடம் ஏற்றக் கூடாது, கோயில் வளாகத்தில் டிரம் செட் அடிக்கக் கூடாது, கைலி அணிந்து வரக் கூடாது எனக் குறிப்பிட்டு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங் களுக்கு முன் மாற்று மதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் செல்ல முயற்சித்தனர்.
அவர்களை கோயில் பணியாளர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர். இதற்கு, இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பழநி முருகன் கோயிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.