ரமண பகவானின் ஆத்ம மாலை

ரமண பகவானின் ஆத்ம மாலை
Updated on
1 min read

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் அண்ணாமலைச் சாரலிலுள்ள விருபாக்ஷி குகையில் வசித்த காலம் அது. அவருடைய மெய்யன்பர்கள் தாங்கள் பிக்க்ஷைக்குச் செல்லும்போது தங்களுக்கென்று தனியாக ஒரு பாடலைப் புனைந்தருளுமாறு பகவானை வேண்டினர்.

அந்த வேண்டுகோளுக்கு இணங்கி, ஒருநாள் கிரிவலம் வரும்போது பகவானால் அவருடைய முயற்சி சிறிதுமின்றி பக்திப் பரவசத்துடன் எழுதப்பட்ட பாடல்களே அருணாசல அக்ஷரமணமாலை. அருணாசலக் கடவுளின் மேல் அன்பன் ரமணன், நாயகன்-நாயகி மற்றும் பல பாவங்களில் புனைந்த இப்பாடல்களின் எண்ணிக்கை 108 என்பதனால், இவை அர்ச்சனைக்கு உகந்த தோத்திரப் பாடல்களாம்.

பகவான் அகர வரிசையில் அக்ஷரங்கள் ஒவ்வொன்றால் ஒவ்வொரு பாடலை ஆரம்பித்து எழுதியதாலும், அவை அருள் மணம் வீசும் பாடல் பூக்களால் புனைந்த மாலை என்பதாலும், அதற்கு அக்ஷர மணமாலை என்ற பெயர் சூட்டப்பட்டது.

மேலும் அக்ஷரங்களால் தொடுத்த திருமண மாலை என்றும் கொள்ளலாம். இவை தவிர, அக்ஷ ரமண மாலை என்று பதம் பிரித்து நோக்கின், அழியாத ரமண பகவானின் ஆத்ம மாலை என்று கூறி நாம் பெருமை கொள்ளலாம்.

நூல்: ஸ்ரீஅருணாசல அக்ஷர மணமாலை (தெளிவுரையுடன்),
108 துதிப்பாடல்கள், தெளிவுரை: எஸ்.எஸ்.சந்திரசேகர்
வெளியீடு: வி.எஸ்.ரமணன், ஸ்ரீ ரமணாஸ்ரமம்
திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in