

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டுக்காக நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் மதுரை மாவட்டம், சாப்டூர் வனச்சரகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை வழியாகச் செல்ல வேண்டும். இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டுக்காக நாளை (ஜூன் 15) முதல் ஜூன் 18-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.