மதுரை அழகர்கோவிலில், சோலைமலை கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்

மதுரை அழகர்கோவிலில், சோலைமலை கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்
Updated on
1 min read

மதுரை: ஜப்பான் நாட்டு பக்தர்கள் 40 பேர் இன்று அழகர்கோவில் மற்றும் சோலைமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இந்து சமய பக்தர் மசாஹி (60). இவர் மருத்துவ அறிவியல் மற்றும் இயற்பியலில் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். இந்து மதம், கடவுள்கள் குறித்தும் ஆய்வு செய்தும் வருகிறார்.

இதற்கிடையில், மசாஹியின் தலைமையில் 18 பெண்கள் உள்பட 40 பேர் தமிழகத்தில் ஆன்மிகத் தேடல் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அதனையொட்டி ராமேசுவரர் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர். இன்று மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்குள்ள கட்டிடக்கலைகளை வியந்து ரசித்தனர். அதனைத்தொடர்ந்து மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழகத்தின் ஆன்மிக, கலாச்சார, பண்பாடுகளை அறிந்து அதனை ஜப்பான் மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு கோயிலின் தலவரலாறு, பூஜை முறைகள், திருவிழாக்கள் குறித்து கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in