Published : 24 Feb 2015 11:07 am

Updated : 24 Feb 2015 11:28 am

 

Published : 24 Feb 2015 11:07 AM
Last Updated : 24 Feb 2015 11:28 AM

உள்கட்டமைப்பு துறைக்கு முக்கியத்துவம் தேவை

உள்கட்டமைப்பு துறைக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. போக்குவரத்து சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பட வேண்டும் என்கின்றனர் தொழில் துறையினர்.

உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங் கள்படி இந்தியாவின் வர்த்தகம் மற்றும் சாலை போக்குவரத்து சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக தாய்லாந்து, வியட் நாம் நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விடவும் பின்தங்கி யுள்ளதாக அந்த புள்ளிவிவரம் சொல்கிறது. 2010 முதல் 2014 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தி யாவில் சாலைப் போக்குவரத்து சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாடு 2.88 புள்ளிகள் என்கிறது அந்த புள்ளி விவரம்.

அதிகபட்ச வளர்ச்சி 5 புள்ளிகள் என்கிற அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அந்த விவரத்தில் ஜெர்மனி 4.12, சீனா 3.5, தாய்லாந்து 3.43, வியட்நாம் 3.15 புள்ளிகள் என வளர்ச்சிகளைக் கண்டுள்ளது.

எனவே பட்ஜெட்டில் போக்கு வரத்துச் சார்ந்த உள்கட்டமைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமூக உட்கட்டமைப்பு சார்ந்த பணிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பாக மருத்து வம் மற்றும் கல்வி சார்ந்த கட்டமைப்புப் பணிகளையும் தவிர்க்க முடியாது. இது குறித்த உலக வங்கி புள்ளிவிவரங்கள்படி இந்தோனேசியா, உகாண்டா போன்ற நாடுகளைவிடவும் இந்தி யாவில் மருத்துவக் கட்டமைப்பு துறையின் வளர்ச்சி பின்தங்கியுள் ளது. ஜிடிபியில் பொதுமக்கள் மருத்துவத்துக்காக செய்யும் செலவு குறைவாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.

தனிநபர் வருமானம் அதிகரிப் பதற்கான வழிகளை காணும் அதே சமயம், மானியங்கள் அளிப்பதை குறைக்க வேண்டும் என்கிற கருத்தும் நிலவுகிறது.

மியூச்சுவல் பண்ட் துறை

பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் பண்ட் துறையும் வருகிற பட்ஜெட்டில் சலுகைகளை எதிர்பார்த்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட் முதலீடுகளுக்கு கூடுதலாக சில வரிச்சலுகைகள் அளிக்க வேண்டும் என அகில இந்திய பரஸ்பர நிதி சங்கத்தின் (ஆம்பி) தலைவர் சந்தீப் சிக்கா சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். 80சி யின் படி இஎல்எஸ்எஸ் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ. 1.5 லட்சத்துக்கு மேல் செய்யப்படும் முதலீடுகளுக்கு தனிச் சலுகை வேண்டும் என்று கூறியுள்ளார்.

மியூச்சுவல் பண்ட் துறை வளர வேண்டுமெனில் நீண்ட கால முதலீடுகள் அவசியமாகிறது. எனவே நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றால் தனியாக வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் இயக்குநர் தினேஷ் கே. ஹாரா இது குறித்து பேசும்போது ``80சிசிடி யின் கீழ் மேற்கொள்ளப்படும் பங்குச் சந்தை சார்ந்த ஓய்வூதிய (யூனிட் லிக்ங்டு பென்ஷன்) திட்டங்களுக்கு கூடுதல் ஊக்கமளிப்பது போல நிதி அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். தற்போது இந்த திட்டத்தின்கீழ் பணியாளர் தனது ஊதியத்தில் 10 சதவீதம் வரை வரிச்சலுகை முதலீட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மியூச்சுவல் பண்ட் துறை ஐந்து கோடி கணக்குகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட இறுதிக்குள் நான்கு கோடி கணக்குகளை மியூச்சுவல் பண்ட் துறை எட்ட உள்ளது என்றும் ஆம்பி தலைவர் சிக்கா குறிப்பிட்டார். எனவே மியூச்சுவல் பண்ட் துறையிலும் பட்ஜெட்டுக்கான எதிர்பார்ப்புகள் மேலோங்கியுள்ளது.

2015பட்ஜெட் முன்னோட்டம்உள்கட்டமைப்பு துறைமுக்கியத்துவம்

You May Like

More From This Category

More From this Author