Published : 13 Jan 2015 12:58 PM
Last Updated : 13 Jan 2015 12:58 PM

நியூட்ரினோ திட்டத்துக்கு அடுத்த ஆண்டில்தான் நிதி ஒதுக்கீடு: திட்ட இயக்குநர் தகவல்

நியூட்ரினோ திட்டத்துக்கு அடுத்த நிதி ஆண்டில்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக திட்ட இயக்குநர் நபா கே.மாண்டல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நியூட்ரினோ திட்ட அதிகாரி நபா கே.மாண்டல் வெளியிட்டுள்ள அறிக்கை:

நியூட்ரினோ திட்டத்தை தேனி பொட்டிபுரத்தில் நிறைவேற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே முடி வெடுக்கப்பட்டு விட்டது. மொத்தம் ரூ.1583 கோடி மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்தின் பூர்வாங்க பணிகளைத் தொடங்குவதற்காக, ஏற்கெனவே 83 கோடி ரூபாய் ஒதுக் கப்பட்டது. அதனைக் கொண்டு சுற்றுச்சுவர், சாலை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது ரூ.1500 கோடி அவசரமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். வரும் 2015-16 நிதியாண்டில் தான் நிதி ஒதுக்கப்பட உள்ளது. இதில் ரூ.470 கோடி ரூபாய் பொட்டிபுரம் மலையைக் குடைந்து குகை அமைத்தல், ஆய்வகம் கட்டுதல், மதுரை வடபழஞ்சியில் உயராற்றல் இயற்பியல் ஆய்வு மையம் கட்டுதல் போன்ற கட்டு மானப் பணிகளுக்குச் செலவிடப் படும். எஞ்சிய பணம் ஆய்வகத்தில் உலகின் மிகப்பெரிய மின்காந்தம் அமைப்பதற்கும், நியூட்ரினோ உணர்கருவிகளை நிறுவுவதற்கும் செலவிடப்படும்.

இந்தத் திட்டத்திற்கு பகுதி பகுதி யாகத் தான் அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். ஒரு பணி முடிந்ததும், அடுத்த கட்ட பணிக்கான நிதி வரும். இந்தத் திட்டம் 2020ம் ஆண்டுக்குள் முழுமை பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x