Published : 29 Jan 2015 10:40 AM
Last Updated : 29 Jan 2015 10:40 AM

அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப் பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு நாடாளு மன்றத்தில் விளக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வின் இந்திய வருகையின்போது, இந்தியா, அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையொப்ப மானது. இதனிடையே, அணு உலைகளால் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை தொடர் புடைய நிறுவனம் அளிப்பது குறித்த உறுதிமொழி பற்றி அரசு விளக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:

உடன்படிக்கையில் எட்டப்பட்ட வர்த்தகக் கூறுகள் குறித்த உறுதி மொழிகளை அரசு நாடாளுமன்றத் தில் விளக்க வேண்டும். அமெரிக்க தரப்பில் அளிக்கப் பட்ட உறுதிமொழிகள் குறித்த தகவல்களை அரசு பகிர்ந்து கொள்ளவில்லை. அவற்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த உடன் படிக்கைகள் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் வரைவு செய்யப்பட்டது. அப்போது எதிர்த்த பாஜக, இறுதியாக அதனை நிறைவேற்றியுள்ளது. இந்த உடன்படிக்கையை காங் கிரஸ் எதிர்க்கவில்லை” என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, வரும் பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இப்பிரச்சினையை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இப்பிரச்சினையை காங்கிரஸ் கவனமாகக் கையாள்வது குறிப்பிடத்தக்கது. இறுதி ஒப்பந்தத்தின் விவரங்களை காங்கிரஸ் கோருகிறது. அமெரிக்க தரப்பில் எழுப்பப்பட்ட இந்திய சட்ட விதிகள் பற்றிய பிரச்சினையை இந்திய அரசு எவ்வாறு கையாண்டுள்ளது, காப்பீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அரசு வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x