Published : 31 Jan 2015 10:08 AM
Last Updated : 31 Jan 2015 10:08 AM

மெட்ரோ ரயில் பணியின்போது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி, 2 பேர் காயம்

சென்னை மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணி நடந்து கொண்டிருந்தபோது, கன்டெய் னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். 2 பேர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே மெட்ரோ ரயிலுக்கான மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, பிஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் கள் ரவீந்திரன் (22), அஸ்வந்த் குமார் (24), கிஷ்வர் (20) ஆகி யோர் பாலத்துக்கான தூண் அமைப் பதற்கு கம்பி கட்டும் பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். நள்ளிரவு 12.30 மணிக்கு அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி திடீரென மோதியதில் கம்பி தூண் சரிந்து விழுந்தது. அடியில் சிக்கிக் கொண்ட ரவீந்திரன் என்ற தொழிலாளி தலையில் அடி பட்டு சம்பவ இடத்திலேயே இறந் தார். அஸ்வந்த்குமார், கிஷ்வர் ஆகிய இருவரும் காயமடைந்த னர். அவர்கள் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து போலீஸார் ரவீந்திரனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இந்த சம்பவம் குறித்து போலீ ஸார் தொடர்ந்து விசாரித்து வரு கின்றனர். தலைமறைவாகியுள்ள கன்டெய்னர் லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இழப்பீடு தொகை எவ்வளவு?

இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரி ஒருவ ரிடம் கேட்ட போது, ‘‘மெட்ரோ நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பணியின்போது இறந்தாலோ, காயம் ஏற்பட்டாலோ உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும். காயமடைந்தோருக்கு முழுமை யான சிகிச்சை பெற மருத்துவ செலவுக்கு பணம் வழங்கப்படும். பணியின்போது இறந்தால் ரூ.8 லட்சம் அல்லது ரூ.9 லட்சம் வழங்கப்படும். அதன்படி, மீனம் பாக்கத்தில் பணியின்போது இறந்தவருக்கு இழப்பீடு எவ்வளவு என்பதை முடிவு செய்து, அதை பிஹார் மாநில தொழிலாளர் நலத்துறை மூலம் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவருக்கும் உரிய இழப்பீடு அளிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x