Last Updated : 17 Jan, 2015 05:25 PM

 

Published : 17 Jan 2015 05:25 PM
Last Updated : 17 Jan 2015 05:25 PM

2014 பூமியின் அதிவெப்பமான ஆண்டு: அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவிப்பு

உலகம் முழுவதும் மக்கள் நிலத்தடி எரிபொருட்களைப் பயன்படுத்தி கிரீன்ஹவுஸ் வாயுக்களை காற்றில் கலக்கச் செய்து சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்ததால் 2014ஆம் ஆண்டு பூமியின் அதிகமான வெப்பமடைந்த ஆண்டாக அமெரிக்க அரசின் இரு அறிவியல் அமைப்புகள் கூறியுள்ளன.

இதுகுறித்து நாஸா விண்வெளி ஆய்வுக்கழகம் மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA) ) நடத்திய ஆய்வின் அடிப்படையில் தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு உலக அளவில் பசுமை இல்ல வாயுக்களினால் ஏற்படுத்தும் மாசுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. 19ஆம் நூற்றாண்டு முழுவதும் 1997லிருந்து 10 வருடங்கள் மிகவும் வெப்பமாக வருடங்களாக இருந்தன என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2010க்கு மேல் உலக வெப்பமயமாதல் குறித்த சில சந்தேகங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கூற்றுகள் சமீப வருடங்களாக நிறுத்தப்பட்டன.

2014ல் வெப்பநிலை, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உள்ளிட்டு வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரை நீண்டிருந்தது. மேற்கு அலாஸ்கா தீவுகளிலிருந்து ரஷ்யாவின் கிழக்கு வரை தென் அமெரிக்காவின் உள்ளார்ந்த பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாவின் இன்னும் சில இடங்களிலும் உலகம் முழுவதும் பதிவானதாக நாசாவும் நோயாவும் தெரிவித்துள்ளன. குழப்பமான வானிலை நிலைமைகளால் வருடத்திற்கு வரும் பாதிப்படையும் புவிவெப்பமாதலுககான காரண கர்த்தாக்களால் மனிதர்களால் உருவாக்கப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களால் உருவாக்கப்படும் மாசு, மிகப்பெரும் இடர்களை பூமிக்கு ஏற்படுத்திவருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வுக் கழக இயக்குநர் காவின் ஸ்மித் தெரிவித்தார்.

பெரும் சுற்றுச்சூழல் கேட்டை விளைவிப்பதில் கிரீன்ஹவுஸ் வாயுக்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாகத் தெரிவிக்கும் இந்தப் புள்ளிவிவரம் மிகவும் தெளிவானது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் நடத்திய ஆய்வு ஏற்கெனவே வெப்பமும் மழையும் மிதமிஞ்சிய அளவில் இருந்ததைத் தெரிவித்ததால் உணவுக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அண்டார்டிகா கண்டத்தில் உள்ள கிரீண்லேண்ட்டில் பிரமாண்ட ஐஸ்கட்டிகள் உருகிக்கொண்டிருப்பதால் கடல் மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால் கடலோர மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

டிசம்பரில் பாரீசில் சந்திப்பு

அடுத்த டிசம்பரில், 200 உலக நாடுகள் பாரீஸில் சந்தித்து புவிவெப்பமாதலைத் தடுப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மாற்றிக்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் பயன்படுத்தும் சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐ.நாவின் இத்தகைய முயற்சிக்கு உச்சபட்ச ஒத்துழைப்பை நல்கும் என்றார்.

புதிய புள்ளிவிவரம் ஒன்றின்படி, ''வரும்காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றம் ஒரு பிரச்சனையாக இருக்காது எனும் இன்னொரு நினைவூட்டலாக - இங்கு இதற்காக நாம் நடவடிக்கை எடுப்பதற்காக இனிமேல் காலம்கடந்து காத்திருக்க முடியாதாகவும் அது நிகழ்கிறது'' என்றார் வெள்ளைமாளிகை அதிகாரி.

பைப்லைன் புதைக்க எதிர்ப்பு

கனடா நாட்டின் கச்சா எண்ணை, கீஸ்டோன் xL பைப்லைன் பூமிக்குள் புதைக்கப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வழியாக எடுத்துச்செல்லப்படுவதை எதிர்ப்பவர்கள் பைப்லைன் கட்டுமானப் பணிகளை எதிர்த்துவருகின்றனர்.

அமெரிக்க அரசின் நடவடிக்கைகள்

அமெரிக்க செனட் உறுப்பினர் ஜேம்ஸ் இன்ஹோஃபே கூறுகையில், 2010க்கும் 2014க்கும் இடையில் உள்ள வெப்பநிலை வித்தியாசம் இன்றியமையாதது என நிரூபணமாகியுள்ளதை அடுத்து அமெரிக்க அரசு நம்பிக்கையான வகையில் சிறந்த காலநிலை மாற்றத்திற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருதால், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகம் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையில்லாதது என்றார்.

மனிதர்களின் செயல்களே புவிவெப்பமாதலுக்கு காரணம் என்பது தெளிவானது. நாம் வாழும் இந்த பூமியை பேரழிவின் விளிம்புக்கு கொண்டுசெல்லக்கூடாது என்ற கவலைப்படுபவர்கள் எங்களை நம்ப வேண்டும் என்றார். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இடையிலான பருவநிலை மாற்றத்திற்கான அமைப்பு (IPCC) கூறுகையில் 95 சதவீத மனிதகுல நடவடிக்கைகளே இதற்கு காரணங்களாகின்றன. மாறாக காலநிலையின் இயற்கை வேறுபாடுகளுக்கு சூரியனில் ஏற்படும் புள்ளிகள் காரணிகளாக உள்ளன. அதற்கும் காரணம் நாம் புவிவெப்பநிலையை உயர்த்திக்கொண்டிருப்பதுதான்.

சூரிய சக்திகளுக்கு பரிந்துரை

பாரீசில், உலக நாடுகளில் இன்னும் அறிமுகமாகாத படிம எரிபொருட்களுக்கு இப்பொழுதே தடை விதிப்பதுகுறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். எண்ணை விலை குறைப்பை ஊக்குவிக்காமல், அதற்கு மாற்றாக காற்று மற்றும் சூரிய சக்திகளைப் பயன்படுத்த சிபாரிசு செய்யப்படும்.

அமெரிக்காவின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி மிச்செல் லெவி ராய்டரிடம் கூறுகையில், அரசியல் மாற்றங்கள் நிகழும் பொறுப்புமிக்க நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

நகைச்சுவை

இங்கிலாந்து தேசிய காலநிலை மாற்றத்திற்கான வளிமண்டல அறிவியல் மையப் பல்கலைக்கழக இயக்குநர் ரோவான் சூட்டான், ஒரு குறிப்பிட்ட வருடம் சூடானதாக இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது, நகைச்சுவையானது. ஆனால் கடந்த 14, 15 ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகியிருந்தது என்பதுதான் உண்மை. நூற்றாண்டின் திருப்பத்தில் வெப்பம் பெருகத் தொடங்கியது தெளிவான விஷயம் என்றார். 1980கள் அல்லது 1990களில் கூட வெப்பம் வேகமாக உயரவில்லை. அசாதாரணமான வெப்பமாற்றம் 1998லிருந்துதான் தனது முதல் அடியை எடுத்துவைத்தது. IPCC தெரிவித்திருப்பது அது வெப்பமயமாதலின் காலஇடைவெளியைத்தான் என்றார்.

எல்நினோ காரணிகள்

1880களிலிருந்து பூமிமேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.4 டிகிரி பாரன்ஹீட் (0.8.டிகிரி செல்சியஸ்) இருந்தது. நாசா மற்றும் நோயா மேற்கொண்ட ஆய்வு கடந்த ஆண்டு நிலத்தில் ஏற்பட்டுவரும் மிதமான வெப்பநிலை அதிகமானதன் காரணமாக உலகின் அனைத்துப் பெருங்கடல்களும் நெருக்கடிக்குள்ளாகின என்று கூறுகிறது.

20ஆம் நூற்றாண்டிற்குப் பிறகான சராசரி வெப்பநிலையாக, உலகம் முழுவதும் நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல்களின் மேல்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.25 டிகிரி பாரன்ஹீட் (0.69 டிகிரி செல்சியஸ்) உயர்ந்திருப்பதாக NOAA தெரிவிக்கிறது. பதிவாகியுள்ள இந்த வெப்பஅளவு என்பது எல்நினோவினால் ஏற்படும் காலநிலைமாற்றம் அல்ல என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். வளிமண்டலத்தை வெப்பமயமாக்கி எல்நினோவின் பெரும்பாதிப்பாக 1998 உள்ளிட்ட கடந்த சில ஆண்டுகள் வரை காணப்பட்டது.

ஐ.நா.நடவடிக்கை

பாரீஸ் ஒப்பந்தத்தின்மூலம் உலக நாடுகளிடையே மாசுக்கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதாக ஐநா தெரிவித்துள்ளது. புவிவெப்பமாதல் 3.6 டிகிரி ஃபாரன்ஹீட் (2 டிகிரி செல்சியஸ்) குறைய வழிவகை செய்யும் வகையில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளில் புவிவெப்பமாதலுக்கு பெரும் காரணமாகத் திகழும் நிலக்கரி உபயோகத்தை தணிக்கும் வகையில் நடவடிக்கைகள் இதன்மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x