Published : 08 Apr 2014 11:36 AM
Last Updated : 08 Apr 2014 11:36 AM

ராஜீவ் லால் - இவரைத் தெரியுமா?

$ ஐடிஎப்சி நிறுவனத்தின் செயல் தலைவர். சர்வதேச அளவில் பிரபலமான வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணியாற்றி 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்.

$ வங்கி தொடங்க லைசென்ஸ் பெற்ற இரு தனியார் நிறுவனங்களில் ஐடிஎப்சி-யும் ஒன்று.

$ திட்ட நிதி, துணிகர முதலீடு, சர்வதேச நிதிச் சந்தை, வர்த்தகம், கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர். குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவின் சந்தை வாய்ப்புகளை நன்கு அறிந்தவர்.

$ சர்வதேச பொருளாதார பேரவையில் கட்டமைப்பு குறித்த கருத்தரங்கிற்கு தலைமை ஏற்றவர். சிஐஐ, அசோசேம் உள்ளிட்ட முன்னணி வர்த்தக சம்மேளனங்களில் தலைமை பொறுப்பை வகித்தவர்.

$ ஐடிஎப்சி நிறுவனத்தில் சேரும் முன்பு நியூயார்க்கில் வார்பர்க் பின்கஸ் நிறுவனத்திலும், மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் ஆசிய பொருளாதார மேம்பாட்டு ஆராய்ச்சி பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் மூத்த அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

$ பல்வேறு கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியுள்ளார்.

$ அரசியலில் இளங்கலை பட்டமும், ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும், கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x