Published : 28 Jan 2015 14:02 pm

Updated : 28 Jan 2015 14:04 pm

 

Published : 28 Jan 2015 02:02 PM
Last Updated : 28 Jan 2015 02:04 PM

ஆஸி. ஒபன்: கலப்பு இரட்டையர் அரையிறுதியில் சானியா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் வென்று இந்திய-பிரேசில் ஜோடியான சானியா மிர்சா-புரூனோ சோரேஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் இணையான கேஸி டெல்லகுவா-ஜான் பியர்ஸ் இணையை சானியா - புருனோ இணை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்றது.

முதல் செட்டில் எதிரணியினரின் சர்வ்களை இருமுறை முறியடித்து 23 நிமிடங்களில் அந்த செட்டைக் கைப்பற்றினர் சானியா-புருனோ இணை.

2-வது செட்டிலும் தொடக்கத்திலேயே சர்வை முறியடித்து 4-2 என்று முன்னிலை வகித்த சானியா இணை அந்த செட்டையும் 6-2 என்று கைப்பற்றி ஆஸி. இணையை வீழ்த்தியது.

சானியா-புருனோ இணை மொத்தம் 18 வின்னர்களை அடித்ததோடு, 10 முறை தவறிழைக்கவும் செய்தனர்.



சானியா மிர்சாகல்ப்பு இரட்டையர் பிரிவுஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் 2015இந்தியா-பிரேசில் இணை

You May Like

More From This Category

More From this Author