Published : 30 Dec 2014 10:17 AM
Last Updated : 30 Dec 2014 10:17 AM

விசாரணைக்குப் பிறகு 8 மீனவர்கள் விடுதலை

மண்டபத்திலிருந்து குமரேசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற பூமிநாதன், ஈஸ்வரன், முனியசாமி, பாலகிருஷ்ணன் ஆகிய 4 மீனவர்களும் கச்சத்தீவு அருகில் படகு பழுதாகி தவித்தனர்.

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து வந்தபோது, 4 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். இந்த 4 மீனவர்களை மீட்பதற்காக நாகராஜ் என்பவரது விசைப்படகில் சென்ற பாலு, ரவி, முருகேசன், கோவிந்தராஜ் ஆகிய மேலும் 4 மீனவர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்களும் நெடுந்தீவு போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் 8 மீனவர்களையும் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.

பழுதடைந்த படகை சீரமைத்த பிறகு 8 மீனவர்களும் தாயகம் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, யாழ்ப் பாணம் சிறையில் அடைக்கப் பட்டுள்ள காரைக் கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, நாகப்பட்டினம்- காரைக் கால் விசைப்படகு மீனவர்கள் 19-வது நாளாக திங்கள்கிழமையும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x