Published : 28 Dec 2014 12:25 PM
Last Updated : 28 Dec 2014 12:25 PM

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 39 தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதிகளில் பாகிஸ்தான் விமானப் படை, ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 39 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வடக்கு வஜிரிஸ்தானின் தத்தா கெல் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை தீவிரவாதிகளின் முகாம் களை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

அதேநாளில் கைபர், ஒரக்ஜாய் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தரைவழியாக தாக்குதல் நடத்தி யது. இந்தத் தாக்குதல்களில் ஒட்டுமொத்தமாக 39 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 20 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்தனர். ராணுவ தரப்பில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.

வடக்கு வஜிரிஸ்தான் பகுதி யில் கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் இதுவரை சுமார் 1200 தீவிர வாதிகள் சுட்டுக் கொல்லப்பட் டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

500 வெடிகுண்டுகள் பறிமுதல்

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இரண்டு தற்கொலைப் படை தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து 500 வெடிகுண்டுகள், 200 கிலோ வெடிமருந்துகள், 13 ராக்கெட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

24 கைதிகள் இடமாற்றம்

குவெட்டா மாவட்ட சிறைச் சாலையில் 97 மரண தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 பேர் தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவர் கள். அவர்களை மீட்க குவெட்டா மாவட்ட சிறை மீது தீவிர வாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 24 மரண தண்டனை கைதிகளும் ரகசியமாக வேறு சிறைக்கு மாற்றப் பட்டுள்ளனர். அவர்கள் எங்கு மாற்றப்பட்டார்கள் என்பது குறித்து தகவல் வெளியிடப் படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x