Published : 04 Nov 2014 10:38 AM
Last Updated : 04 Nov 2014 10:38 AM

உலக பொருளாதார பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது

டெல்லியில் இன்று உலக பொருளாதார பேரவையின் (டபிள்யூ.இ.எப்) இந்திய சந்திப்பு தொடங்குகிறது. மூன்று நாள் நாள்கள் நடக்க இருக்கும் இந்த கூட்டம் இந்திய தொழிலக கூட்டமைப்பியின் (சிஐஐ) துணையுடன் நடக்கிறது.

இதில் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் இருந்து 700 தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தொழில்துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள் என 45 நாடுகளில் இருந்து கலந்துகொள்கிறார்கள்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர்பிரசாத் மற்றும் மின்சாரம், நிலக்கரி அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் பிரதமர் மோடியின் பெயர் இல்லை. ஆனால் நிகழ்ச்சி குறித்து அவரிடம் விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கலந்துகொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தாகவும் சிஐஐ-ன் இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x